EBM News Tamil
Leading News Portal in Tamil

‘நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம் என நினைக்கிறேன்…’ – டேவிட் வார்னர் | david warner thinks that he could become a member of Parliament


சென்னை: தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம் என நினைப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அது குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

38 வயதான டேவிட் வார்னர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இருப்பினும் உலக நாடுகளில் நடைபெறும் ஃப்ரான்சைஸ் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். பிக் பேஷ் லீகில் சிட்னி தண்டர்ஸ், பாகிஸ்தான் சூப்பர் லீகில் கராச்சி கிங்ஸ் போன்ற அணிகளில் தற்போது அவர் இடம்பெற்றுள்ளார்.

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக அவர் பதிவிடுவது வழக்கம். அது ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். ‘நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம் என நினைக்கிறேன். என்ன நினைக்கிறீர்கள்?’ என தற்போது அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘எங்கு?’, ‘ஆஸ்திரேலியாவா அல்லது இந்தியாவா?’ என நெட்டிசன்கள் அதற்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், ஆஸ்திரேலிய அரசியல் சூழல் குறித்த எக்ஸ் தள பதிவுக்கு தான் வார்னர் இப்படி ரிப்ளை கொடுத்துள்ளார். ஆக, அது ஆஸ்திரேலிய அரசியல் என்பது உறுதியாகி உள்ளது.

முன்னதாக, தெலுங்கு படமான ‘ராபின்ஹுட்’ படத்தில் தான் நடிப்பது குறித்து அவர் சமூக வலைதள பதிவிட்டிருந்தார். கிரிக்கெட் களம் மற்றும் சமூக வலைதளத்தில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் போட்டு வார்னர் அசத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தொடங்க உள்ள ஐபிஎல் 2025 சீசனில் அவர் எந்த அணியிலும் இடம்பெறவில்லை. கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அவர் விளையாடி இருந்தார்.