துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் ஜோடி, உலகின் முதல் நிலை ஜோடியான எல் சவேடாரின் மார்செலோ அரேவாலோ, குரோஷியாவின் மேட் பாவிச் ஜோடியுடன் மோதியது. இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 4-6 7-6(1), 10-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.