Last Updated : 26 Feb, 2025 05:38 AM
Published : 26 Feb 2025 05:38 AM
Last Updated : 26 Feb 2025 05:38 AM
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நேற்று ராவல்பிண்டியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இரு அணிகளும் தலா 3 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை தோற்கடித்து இருந்தது. ஆஸ்திரேலியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 28-ம் தேதி ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. தென் ஆப்பிரிக்க அணி மார்ச் 1-ம் தேதி இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.
FOLLOW US
தவறவிடாதீர்!