EBM News Tamil
Leading News Portal in Tamil

டபிள்யூபிஎல் கிரிக்கெட்: உ.பி. அணிக்கு தீப்தி சர்மா கேப்டன் | deepti sharma to captain up warriors team in wpl 2025 season


மும்பை: மகளிர் பிரீமியர் கிரிக்கெட் (டபிள்யூபிஎல்) லீக் தொடரில் உ.பி.வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3-வது டபிள்யூபிஎல் சீசன் போட்டிகள் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் உ.பி.வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனை அலிசா ஹீலி இருந்தார். இந்த சீசனிலிருந்து காயம் காரணமாக ஹீலி விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து தீப்தி சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.