நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா காயம் | new zealand cricketer rachin ravindra injured during match
லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின்போது நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா காயமடைந்தார்.
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. வரும் 14-ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில் லாகூரில் நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியின்போது ஃபீல்டிங் செய்த நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் களத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார். சிகிச்சைக்குப் பின் அவர் தற்போது ஓய்வில் உள்ளார்.