EBM News Tamil
Leading News Portal in Tamil

ஐசிசி டி20 தரவரிசையில் திலக் வர்மாவுக்கு 2-வது இடம் | team india batsman Tilak Verma moves to second place in ICC T20 rankings


துபாய்: டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் திலக் வர்மா 832 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 855 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் திலக் வர்மா முறையே 19, 72, 18 ரன்கள் சேர்த்துள்ளார். தொடரில் 2 ஆட்டங்கள் மீதம் உள்ளதால் தரவரிசையில் திலக் வர்மா முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 59 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தின் லியாம் லிவிஸ்டன் 5 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தையும், பென் டக்கெட் 28 இடங்கள் முன்னேறி 68-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 679 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தில் ஆதில் ரஷீத் 718 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி முதல் இடத்தை அடைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்தில் தொடர்கிறார்.