EBM News Tamil
Leading News Portal in Tamil

டெல்லி கேபிடல்ஸ் அணி பணத்துக்காக என்னை தக்கவைக்கவில்லையா? – கவாஸ்கர் கருத்துக்கு ரிஷப் பந்த் மறுப்பு | money not reason Rishabh Pant to Gavaskar on delhi capitals retention


புதுடெல்லி: 2025-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதி அரேபி​யா​வின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 31-ம் தேதி ஐபிஎல் தொடரில் பங்கேற்​கும் அனைத்து அணிகளும் முக்​கியமான வீரர்களை தக்க​வைத்​துக் கொண்டு மற்ற வீரர்களை விடு​வித்தனர். இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்தை அந்த அணி நிர்வாகம் தக்கவைத்​துக் கொள்​ளாமல் விடு​வித்து இருந்​தது.

இந்நிலை​யில் இந்திய கிரிக்​கெட் அணியின் ஜாம்​பவானும், வர்ணனை​யாள​ருமான சுனில் கவாஸ்கர் ஐபிஎல் ஏலம் முன்னோட்டம் தொடர்பான நிகழ்ச்​சி​யில் பேசுகை​யில், ‘‘ஏல நடைமுறை முற்றி​லும் வேறு​பட்​டது; அது எப்படி செல்​லும் என்று தெரி​யாது. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணி நிச்​சயமாக ரிஷப் பந்த்தை மீண்​டும் அணிக்கு கொண்டு வருவார்கள் என்று நினைக்கிறேன். சில நேரங்​களில், ஒரு வீரரை தக்கவைக்க வேண்டியிருக்​கும்​போது, உரிமை​யாள​ருக்​கும், வீரருக்​கும் இடையே எதிர்​பார்க்​கப்​படும் கட்ட​ணங்கள் குறித்து பேச்சு எழக்​கூடும்.

அணி உரிமை​யாளரால் தக்கவைக்​கப்​பட்ட சில வீரர்​களின் தொகை​யைவிட ஏலத்​தில் எடுக்​கப்​படும் வீரர்​களின் தொகை அதிகமாக இருந்துள்ளதை நாம் பார்த்​துள்ளோம். எனவே, ரிஷப் பந்த் விஷயத்​தில் தக்கவைப்பு தொகை​யில் சில கருத்து வேறு​பாடுகள் இருந்​திருக்கலாம் என நான் கருதுகிறேன்.

டெல்லி அணிக்கு கேப்டன் தேவை என்ப​தால் ரிஷப் பந்த் நிச்​சயம் மீண்​டும் அந்த அணிக்கு திரும்ப வேண்​டும் என்பது எனது கருத்து. ரிஷப் பந்த் தங்கள் அணியில் இல்லை என்றால், அவர்கள் ஒரு புதிய கேப்​டனைத் தேட வேண்​டும். டெல்லி அணி நிச்​சயம் ரிஷப் பந்த்தை தேர்வு செய்​யும் என்பதே எனது கருத்து” என்றார்.

இந்நிலை​யில் சுனில் கவாஸ்​கரின் கருத்தை ரிஷப் பந்த் மறுத்​துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘‘டெல்லி கேபிடல்ஸ் அணியில் என்னுடைய தக்கவைப்பு பணத்​தைப் பற்றியது அல்ல என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடி​யும்” எனத் தெரிவித்துள்ளார்.