WPL 2024 ஏலம் | சுதர்லாந்து, காஷ்வீ கவுதம் ரூ.2 கோடிக்கு ஏலம் போயுள்ளனர் | WPL 2024 Auction Sutherland and Kashvee Gautam have bid for Rs.2 crore
மும்பை: எதிர்வரும் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான ஏலம் மும்பையில் சனிக்கிழமை (டிச. 9) நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக ரூ.2 கோடிக்கு ஆஸ்திரேலியாவின் சுதர்லாந்து மற்றும் இந்தியாவின் காஷ்வீ கவுதம் வாங்கப்பட்டுள்ளனர்.
இந்த ஏலத்தில் இந்தியாவை சேர்ந்த 103 வீராங்கனைகள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 61 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் மொத்தமாக 30 வீராங்கனைகளை ஐந்து அணிகளும் வாங்க முடியும். மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் அன்னாபெல் சுதர்லாந்தை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி. அதே போல சர்வதேச போட்டிகளில் விளையாடாத காஷ்வீ கவுதமை 2 கோடி ரூபாய்க்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது.
அதே போல யுபி வாரியர்ஸ் அணி விருந்தா தினேஷை ரூ.1.3 கோடிக்கும், தென் ஆப்பிரிக்க பவுலர் ஷப்னிம் இஸ்மாயிலை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.2 கோடிக்கும், லிட்ச்ஃபீல்டை குஜராத் அணி ரூ.1 கோடிக்கும் வாங்கி இருந்தது.
மறுபுறம் சர்வதேச அளவில் தங்கள் ஆட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த சமாரி அத்தப்பட்டு, டாட்டின், தாரா நோரிஸ் ஆகியோர் ஏலத்தில் வங்கப்படவில்லை.