2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்தியா கடும் போட்டியாளராக இருக்கும்: ரவி சாஸ்திரி | India will be a tough contender in T20 World Cup 2024 Ravi Shastri
Last Updated : 28 Nov, 2023 07:51 AM
Published : 28 Nov 2023 07:51 AM
Last Updated : 28 Nov 2023 07:51 AM

மும்பை: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சவால் நிறைந்ததாக திகழும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் கடந்த 19-ம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளுடன் வலுவான அணியாக திகழ்ந்த இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சொந்த மண்ணில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி ஐசிசி டி 20கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி கடும் போட்டியாளராக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், மேலும் கூறியதாவது:
உலகக் கோப்பை இறுதிப் போட்டி இதயங்களை நொறுக்கியது. ஆனால் இதில் இருந்துஇந்திய அணி வீரர்கள் கற்றுக்கொள்வார்கள். தோல்வியில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். விரைவிலேயே இந்திய அணிஉலகக் கோப்பையை வெல்வதை காண்போம். இது 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்காது. ஏனெனில் அணியை மீண்டும் கட்டமைக்க வேண்டும். ஆனால் டி 20 கிரிக்கெட் போட்டியாக இருக்கலாம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கடும் போட்டியாளராக இருக்கும். ஏனெனில் அணியில் அதற்கான கரு உள்ளது. குறுகிய வடிவிலான இந்த போட்டியை நோக்கி கவனம் செலுத்த வேண்டும்.
உண்மையைச் சொல்வதானால், இந்திய அணி வலுவானதாக இருந்த போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது வெளியில் இருந்து பார்க்கும்போது இன்னும் வலிக்கிறது. எனினும் எதுவும் எளிதில் கிடைத்துவிடாது. இந்திய அணியின்ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு உலகக் கோப்பையை வெல்ல 6 உலகக் கோப்பைகளாக காத்திருக்க வேண்டியிருந்தது. உலகக் கோப்பையை எளிதில் வென்றுவிட முடியாது. உலகக் கோப்பையை வெல்ல இறுதிப்போட்டி நடைபெறும் நாள் சிறப்பானதாக அமைய வேண்டும்.
இறுதிப்போட்டிக்கு முன்னதாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இறுதிப்போட்டியிலும் அதனை செயல்படுத்த வேண்டும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆகிய இரண்டு நாள்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்தஇரண்டு நாள்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நீங்கள்தான் வெற்றியாளர். அந்த இரண்டு நாள்களிலும் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டதால் கோப்பையை வென்றது. இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.
FOLLOW US
தவறவிடாதீர்!