EBM News Tamil
Leading News Portal in Tamil

IND vs AUS T20 தொடர் | சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி அறிவிப்பு! | Young team announced under Suryakumar Yadav captain india australia t20i series


மும்பை: வரும் வியாழக்கிழமை முதல் டிசம்பர் 3-ம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் அடங்கிய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். இந்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். கடைசி இரண்டு டி20 போட்டிகளில் ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான போட்டிகள் விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், குவஹாத்தி, ராய்ப்பூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறுகின்றன.

ஆஸ்திரேலிய அணி விவரம்: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.