EBM News Tamil
Leading News Portal in Tamil

டி20 உலகக் கோப்பை: போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்தது ஐசிசி | T20 World Cup: ICC Announces Venues


துபாய்: டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி முதல் 30-ம் தேதி நடக்கவிருக்கும் இத்தொடரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் இணைந்து இத்தொடரை நடத்த இருக்கின்றன.

முதல்முறையாக இந்தத் தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, மேற்கிந்திய தீவுகளில் ஆன்டிகுவா-பார்புடா, பார்படாஸ், கயானா, செயின் ட் லூசியா, செயின் ட் வின் சென் ட், டிரினிடாட்-டுபாகோ ஆகிய இடங்கள் போட்டிகள் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் அமெரிக்காவில் டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயார்க் ஆகிய இடங்கள் போட்டிகள் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.