உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணிக்கு வெண்கலம் | Bronze for Indian team in World Shooting Championship
பாகு: உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் ஷிவா நார்வால், சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,734 புள்ளிகள் குவித்து வெண்கலப் பதக்கம் வென்றது. ஷிவா நார்வால் 579 புள்ளிகளும், சரப்ஜோத் சிங் 578 புள்ளிகளும், அர்ஜூன் சிங் சீமா 577 புள்ளிகளும் சேர்த்தனர். சீன அணி 1,749 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கமும், ஜெர்மனி 1,743 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றன..