EBM News Tamil
Leading News Portal in Tamil

“உலகக் கோப்பை தொடரில் கோலியிடம் கேப்டன் பொறுப்பு வழங்கினால்…” – ரஷித் லத்தீஃப் கருத்து | team India will be ready for World Cup if Kohli does this Ex Pak Player


எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆசிய அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் செயல்திறன் சார்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடவுள்ளன. இந்தச் சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் செயல்திறன் குறித்து ரஷித் லத்தீஃப் பேசியுள்ளார்.

“இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய அணிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் வேகமான ஸ்ட்ரைக் ரேட் தேவைப்படும் இடத்தில் தடுமாறுவதாக நான் பார்க்கிறேன். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணி வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஸ்வீப் ஆடுவதை அஸ்திரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல பேட்டிங் ஆர்டரில் இந்திய அணி மிடில் மற்றும் லோயர் ஆர்டரை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பது அவர்கள் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். புதிதாக வரும் வீரர்கள், தங்களை அந்த இடத்தில் நிலைநாட்ட முடியாமல் போவதற்கு அதுவே காரணம். மேலும், இந்திய அணி விராட் கோலியை கேப்டனாக தொடரச் செய்ய வேண்டும். அதைச் செய்தால் இந்திய அணி உலகக் கோப்பைக்கு தயாராகிவிடும்” என அவர் தெரிவித்துள்ளார்.