இருமுறை டி20 உலகக்கோப்பையை வென்ற, டி20 கிரிக்கெட்டில் வலுவான மே.இ.தீவுகளிடம் தோற்றதில் இந்திய அணிக்கு அவமானம் ஒன்றும் இல்லை என்றாலும், சில இளம் வீரர்களிடம் தீப்பொறி இல்லை. ஐபிஎல் பணத்தினால் கோடிகளில் புரள்கின்றனர், அதனால் நாட்டுக்கு ஆடும்போது ஆர்வம் குன்றிக் காணப்படுகின்றனர் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
தி இந்து ஸ்போர்ட் ஸ்டாரில் அவர் எழுதியுள்ள பத்தியின் விவரம்: இந்திய அணி, மே.இ.தீவுகளுக்கு எதிராக முதல் 2 போட்டிகளில் தோற்றது. பிறகு எழுச்சி கண்டு அடுத்த 2 போட்டிகளில் வென்றது, ஆனால் கடைசி போட்டியின் போது இந்தியாவுக்குத் திரும்பும் எண்ணத்தினால் மனம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். இதனால் தீவிரம் குறைந்திருக்கும்.