டொராண்டோ: டொராண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கால் இறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார். இதில் கார்லோஸ் அல்கராஸ் 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 7-6 (9-7), 7-5 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவையும் வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தார்.