பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக அசாம் செல்கிறார்
புதுடில்லி : பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நாளை அசாம் செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, ஷில்லாங்கில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு தலைமையகத்தை பார்வையிடுகிறார்; ஆக்சிஜன் உற்பத்தி மையத்தையும் திறந்து வைக்கிறார். இதைத் தவிர, கவுஹாத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்புதுடில்லி : பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நாளை அசாம் செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, ஷில்லாங்கில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு தலைமையகத்தை பார்வையிடுகிறார்; ஆக்சிஜன் உற்பத்தி மையத்தையும் திறந்து வைக்கிறார். இதைத் தவிர, கவுஹாத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வட கிழக்கு மாநில முதல்வர்கள், தலைமைச் செயலர், டி.ஜி.பி.,க்களை, நாளை சந்தித்து பேசஉள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் கொரோனா மற்றும் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து அவர் ஆய்வு செய்ய உள்ளார்.