இந்திய கட்டிடங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தும்படி தலீபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவு.
ஆப்கனில் உள்ள இந்திய கட்டிடங்களை குறிவையுங்கள்.. தலீபான்களுக்கு பாக ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய சொத்துக்கள், இந்திய கட்டிடங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தும்படி ஜிகாதி ஆயுதப் போராளிகள் மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கி கொண்டுள்ள நிலையில், அங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் தனது கட்டுக்குள் கொண்டு வர தொடங்கியுள்ளனர்.
400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதியை தலிபான்கள் கைப்பற்றி விட்டதாகவும், முக்கிய நகரங்கள், முக்கியமான சாலைகள் மற்றும் எல்லை பகுதிகள் தற்போது தலிபான்கள் வசம் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.