EBM News Tamil
Leading News Portal in Tamil

முழு ஊரடங்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!

சென்னை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சூளைமேட்டைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், முழு ஊரடங்கு அறிவிப்பு மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் பொருட்கள் வாங்க திரண்டதால் தனிமனித இடைவெளி மீறப்பட்டுள்ளதாகவும், முழு ஊரடங்கு அறிவிப்பை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.