EBM News Tamil
Leading News Portal in Tamil

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: அதன் பலனை மக்களுக்கு மறுப்பது ஒரு மோசடி – ரவிக்குமார் எம்.பி. விமர்சனம்

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும் வரியைப்போட்டு அதன் பலனை மக்களுக்கு மறுப்பது ஒரு மோசடி என ரவிக்குமார் எம்.பி விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு பேரல் 15 டாலருக்கும் குறைவாகப் போயிருக்கிறது. இப்போதும் வரியைப்போட்டு அதன் பலனை மக்களுக்கு மறுத்தால் அதைவிட மோசடி வேறொன்றும் இருக்கமுடியாது. மத்திய அரசே! பெட்ரோல் டீசல் விலையை உடனே குறை!” என்று கூறியுள்ளார்.

கொரோனா தொடர்பான விவரங்களை அறிக்கையாக வெளியிடும்படி இன்னொரு பதிவில் தெரிவித்துள்ள அவர், ”ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும்கூட ஒவ்வொருநாளும் அமைச்சர் பிரஸ்மீட் நடத்துவது பொறுப்பின்மையின் வெளிப்பாடு. நோய்த்தொற்று விவரங்களை அறிக்கையாக வெளியிட தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.