10 வயதுக்கு கீழ் 4 பேருக்கு கொரோனா தொற்று…! சென்னையில் எந்த வயதினருக்கு எவ்வளவு பாதிப்பு…?
நேற்று 10 வயதுக்கு கீழ் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த வயதினருக்கு எவ்வளவு பாதிப்பு என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னையில் இதுவரை மொத்தம் 303 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 80 பேர் குணமடைந்து உள்ளனர். அதிகபட்சமாக ராயபுரத்தில் 92 பேரும், திருவிக நகரில் 39 பேரும், தேனாம்பேட்டையில் 38 பேரும், தடையார்ப்பேட்டையில் 37 பேரும், கோடம்பாக்கத்தில் 31 பேரும், அண்ணாநகரில் 27 பேரும் உள்ளனர்.
மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் 5 பேரும், ஆலந்தூரில் 5 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் உள்ளனர். சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.
மண்டலம் வாரியாக மொத்தம் உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் பட்டியல்:
திருவொற்றியூர் – 9 – 0 – 0
மணலி – 0 – 0 – 0மாதவரம் – 3 – 0 – 3
தண்டையார்பேட்டை – 37 – 1 – 2
ராயபுரம் – 92 – 5 – 17
திருவிக நகர் – 39 – 1 – 12
அம்பத்தூர் – 0 – 0 – 0- 2 – 0 – 1
சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.23% பேரும், பெண்கள் 34.77% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 64 பேருக்கு தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 4 நபரும், 80 வயதுக்கு மேல் 7 நபரும் பாதித்து உள்ளனர்.
10 முதல் 19 வயதுள்ளோர் 21 பேருக்கும், 20 முதல் 29 வயதுள்ளோர் 49 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 56 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 53 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 32 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 16 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
வயதுபடி பாதித்தோர் எண்ணிக்கை:
0-9 = 4
10-19 = 21
20-29 = 49
30-39 = 64
40-49 = 56
50-59 = 53
60-69 = 32
70-79 = 16
80 = 7
சென்னை மாநகராட்சிக்கு முதல்கட்டமாக வழங்கப்பட்ட 6000 ரெப்பிட் டெஸ்ட் கிட் மூலம் இதுவரை 1000 பேரிடம் பரிசோதிக்கப்பட்டு உள்ளதில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என வீடு வீடாக இதுவரை 2 கோடியே 57 லட்சத்து 4 ஆயிரத்து 19 பேருக்கு அறிகுறிகள் பரிசோதனை செய்ததில் 610 பேருக்கு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இந்த பணிகள் மூலம் சென்னையில் விரைவாக தொற்று உள்ளவர்களை கண்டறிந்து வருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.