EBM News Tamil
Leading News Portal in Tamil

ஊரடங்கு தளர்வு இல்லை; கட்டுப்பாடுகள் நீடிக்கும் – தமிழக அரசு

மறு அறிவிப்பு வரும்வரை ஏற்கெனவே உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் நீடிக்கும் என்றும் நாளை தளர்வுகள் அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பாதிப்பு இல்லாத பகுதிகளில், நாளை (ஏப்ரல் 20) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சில நிறுவனங்களை இயங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக மாநில அரசு முடிவெடுத்து, எந்தெந்த நிறுவனங்கள் இயங்கலாம் என அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த குழு தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடன் நாளை தெரிவிக்க உள்ளது.

இதையெடுத்து, முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிகிறது. எனவே, தமிழக அரசின் ஆணைகள் வெளியிடும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.