திருச்சியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்த மொத்த காய்கறிச் சந்தை..!
திருச்சியில் மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சியில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க 8 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டன. அத்துடன் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பால் பண்ணை அருகே காய்கறி மொத்த வியாபாரம் செய்யப்படும் என்றும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மட்டும் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு பொதுமக்கள் ஏராளமானோர் மொத்த காய்கறி சந்தையில் குவிந்தனர். இதனால், பழைய பால்பண்ணை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.