கடலூரில் மெத்தனால் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு..!
டலூர் மாவட்டத்தில் மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் போதைக்காக விபரீதமான முடிவுக்கு செல்கின்றனர்.
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த 4 பேர் மெத்தனாலில் தண்ணீரை ஊற்றி குடித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர்.
இதில் நேற்று சந்திரஹாசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மாயகிருஷ்ணன், சுந்தர்ராஜன் ஆகியோர் இன்று உயிரிழந்துள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே தீவர சிகிச்சையில் உள்ளார்.