கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கிய சுந்தர் பிச்சை
இந்தியாவுக்கான கொரோனா நிவாரண நிதியாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தற்போது அச்சுறுத்திவருகிறது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகளுக்காக பல்வேறு அமைப்புகளும் இந்தியா அரசுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர்.
இந்தநிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ‘இந்தியாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். GIVE INDIA என்கிற தன்னார்வ அமைப்பு நன்கொடையாளர்களுக்கும் உதவி தேவைப்படும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தற்போது கூகுள் CEO சுந்தர் பிச்சை ரூ.5 கோடி நிதி அளித்துள்ளார். தினசரி கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா லாக் டெளன் நேரத்தில் தேவையான பண உதவி வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என GIVE INDIA தெரிவித்துள்ளது.