EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8356ஆக உயர்வு – உயிரிழப்பு 273

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8356 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 273 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1761 ஐ கடந்துள்ளது.

டெல்லியில் 1069 பேரும், தமிழகத்தில் 969 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 700 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 504, மத்திய பிரதேசத்தில் 532, உத்தர பிரதேசத்தில் 452 ஆக பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா முதலில் வெளிப்பட்ட கேரளா, பாதிப்பு எண்ணிக்கையில் தற்போது 9 வது இடத்தில் உள்ளது.