EBM News Tamil
Leading News Portal in Tamil

வாட்ஸ்அப் வதந்தியை டி.வி நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டிய மத்திய அமைச்சர்!

ஊரடங்கு பற்றி வாட்ஸ்அப்-ல் பரவிய பொய்யான செய்தியை பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மத்திய அமைச்சர் சொல்லியிருப்பது சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஏப்ரல் 9 அன்று ஒரு பிரபல இந்தி தொலைக்காட்சியில் பேசிய மத்திய அமைச்சர் வி.பி. சிங், உத்தர பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீல் வைக்கப்படுவது குறித்து கருத்துரைத்தார். அப்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது பற்றிய அவருடைய நிலைப்பாட்டை கேட்கும்போது, ”உலக சுகாதார மையம் (WHO) வழங்கிய அறிவுறுத்தலின்படி 21 நாட்கள் ஊரடங்கு முடிந்ததும் 5 நாட்களுக்கு இதைத் தளர்த்திவிட்டு அதிலிருந்து 21 நாட்களுக்குத் தொடரலாம்” என்றார்.

இவ்வாறு 5 நாட்கள் ஊரடங்கை தளர்த்தும்படி உலக சுகாதார மையம் (WHO) சொன்னதாகப் பரவிய இந்த தகவல் தவறானது என்று ஏப்ரல் 5 அன்றே WHO அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தது. “அடிப்படையற்றது”, ”போலியானது” என அது குறிப்பிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதை மத்திய அமைச்சரே தொலைக்காட்சியில் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.