கொரோனா அச்சத்தால் 3 மடங்கு வருவாய் ஈட்டிய தெர்மல் கேமரா நிறுவனங்கள்..!
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண தெர்மல் கேமராக்கள் பயன்படுகின்றன. கொரோனாவின் அறிகுறிகளில் ஒன்றாக காய்ச்சல் இருப்பதால், அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்களும், தொழிலாளர்களும் கூடும் இடங்களில் அவர்களை கண்காணித்து காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிய அதிகப்படியான தெர்மல் கேமராக்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
விற்பனை அதிகரித்துள்ளதால் இந்த காலாண்டில் தெர்மல் கேமரா நிறுவனங்கள் மூன்று மடங்கு அதிக வருவாயை ஈட்டியுள்ளன.