EBM News Tamil
Leading News Portal in Tamil

தமிழகத்திற்கு மளிகைப் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளை தடுக்கக் கூடாது – பிரதமரிடம் அதிமுக கோரிக்கை

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை வைத்திருக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி இன்று கொரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தால், ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

”ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடியும் அவர்களிடம் பேசியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான யுத்தம் நம்மை ஒன்றினைத்துள்ளது. கொரோனா வந்தது முதல் வெளியேறுவது வரை நாம் போராட வேண்டியது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் கலந்துகொண்ட நவநீதகிருஷ்ணன் எம்.பி கூட்டம் முடிந்த பின்னர் கூறுகையில், “ ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான முழு விவரத்தை மத்திய அரசு வெளியிடும். மருத்துவ ரீதியாக, பொருளாதார நடவடிக்கை, 144 தடை உத்தரவு நடவடிக்கை என்று அனைத்தும் காணொலி காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

Also read: உலகையே அழிக்க முடிந்தவர்களால் மக்களைக் காக்க முடியவில்லை – சீமான்தமிழகத்தில் நாளுக்கு நாள் இந்த தொற்று அதிகரித்து வருகிறது. பிரதமர் எடுத்த நடவடிக்கையால்தான் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிதி கேட்டு முதல்வர், பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் கடிதம் எழுதி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்

ஏற்கனவே முதல்வர் பிரதமருக்கு இரு கடிதங்கள் எழுதியுள்ளார். வட மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்களை எடுத்து வரும் லாரிகளை எல்லைகளில் தடுத்து நிறுத்தாமல் தமிழகத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பிரதமர் குறிப்பு எடுத்துக்கொண்டார்.”