EBM News Tamil
Leading News Portal in Tamil

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் – சந்திரசேகர ராவ்!

தெலங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 320-ஐத் தாண்டியுள்ளது. 7 பேர் கிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, சந்திரசேகர ராவ் வலியுறுத்திதயுள்ளார்.

கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் சரிந்தால் அதை மீட்டுவிடலாம் என்றும், உயிர் போனால் திரும்பி வராது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே கொரோனாவை ஒழிக்க ஒரே ஆயுதம் ஊரடங்கு உத்தரவே எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதாரத்தில் வலுவாக உள்ள இங்கிலாந்தே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதால் இங்கு ஏப்ரல் 14-க்குப் பின்னரும் ஊரடங்கு தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே தெலங்கானாவில் ஜூன் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 15க்கு பிறகு இரண்டு வாரம் ஊரடங்கை நீட்டிக்கலாம் என கருத்து மட்டுமே தெரிவித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.