பிணங்கள் கேட்கின்றன.. எந்த விளக்கை அணைப்பது.. எதை ஏற்றுவது.. வைரலாகும் ரவிக்குமாரின் சுளீர் வரிகள்!
சென்னை: “பிணங்கள் கேட்கின்றன.. எந்த விளக்கை அணைப்பது.. எந்த விளக்கை ஏற்றுவது” என்று எம்பி ரவிக்குமாரின் கவிதை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் ஒரு காலத்தில் படைப்பாளிகளே கோலோச்சி கொண்டிருந்த நிலையில், தற்போது படைப்பாளிகளை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது… அந்த வகையில் இந்த குறையை நீக்க வந்தவர்களில் விழுப்புரம் எம்பி ரவிக்குமாரும் ஒருவர்!
வழக்கறிஞர், எழுத்தாளர், இலக்கியவாதி, அரசியல் விமர்சகர்.. விசிகவின் மாநில பொது செயலர், முன்னாள் எம்எல்ஏ, என இப்படி பன்முகத்தன்மையுடன் திகழ்பவர் ரவிக்குமார்.. தமிழ் அறிவுசார் மற்றும் ஒரு சாதி-எதிர்ப்பு ஆர்வலர்… பத்திரிகை ஆசிரியர்.. பல நூல்களை எழுதியவர்.
ஆங்கில மொழிபெயர்ப்புகள் இவரது ஸ்பெஷல்.. நிறப்பிரிகை என்ற குறும் பத்திரிக்கையின் ஆசிரியர்.. 1990களில் நம் மாநிலத்தில் பல புதிய இளம் எழுத்தாளர்கள் உருவாக காரணமாக இருந்தது இந்த நிறப்பிரிகை பத்திரிகை என்பதை யாராலும் மறுக்க முடியாது!
கொள்கை அளவில் தங்களுடன் முரண்பட்டு நிற்கும் பாமகவை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெற்றவர் ரவிக்குமார்… கொரோனா தடுப்பு குறித்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தன்னுடைய தொகுதியில் மேற்கொண்டு வருகிறார்.. என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை உடனுக்குடன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் ஒரு கவிதை எழுதி உள்ளார்.. அது “விளக்கு அணைப்பது” குறித்த கவிதை… பிரதமர் ஏற்ற சொன்ன அதே விளக்குதான்.. விளக்கு ஏற்றுவது குறித்து ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை அறிக்கைகளாகவும், ட்வீட்களாகவும், பேட்டிகளாகவும், பதிவிட்ட நிலையில், ரவிக்குமார் மட்டும் வித்தியாசமாக தன்னுடைய கருத்தை ஒருசில வரிகளே என்றாலும் நறுக்கென பதிவிட்டுள்ளார்.. வேதனை கலந்த வலி நிறைந்த வார்த்தை வரிகள் இவைதான்: