வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா… இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது… நல்ல செய்தி
அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகளை கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில், இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்பட்டு வரும் கோவிட்-19 வைரஸ் மனித குலத்திற்கே தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
எனவே வீடுகளுக்கு உள்ளேயே மக்கள் முடங்கி கிடக்கின்றனர். உலகின் பெரும்பாலான நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இங்கு தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர முடியும். தேவை இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வெறிச்சோடி உள்ள சாலைகளில், ஒரு சிலர் ஜாலி ரைடு சென்று கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் மீது காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுபோல் ஒரு சிலர் வாகனங்களில் வெளியே சுற்றி வந்தாலும், பொதுவாக பார்த்தால் இந்தியாவில் வாகன போக்குவரத்து அப்படியே முடங்கி போயுள்ளது. ஊரடங்கு காரணமாக தற்போது பஸ்கள் இயக்கப்படுவது கிடையாது. வாகனங்களில் வேலைக்கு சென்று வருவோரின் எண்ணிக்கையும் அப்படியே சரிந்துள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பெரும்பாலானோர் வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.