ஹாட் ஸ்பாட்.. கொங்கு மண்டலமா.. கொரோனா மண்டலமா.. அதிர வைக்கும் பரவல்.. அதி தீவிர ஆக்ஷனில் அரசு!
சென்னை: கொங்கு மண்டலமா.. கொரோனா மண்டலமா என தெரியவில்லை.. மொத்த பேரும் கலக்கத்தில் உள்ளனர்.. ஏற்கனவே ஹாட் ஸ்பாட் என்று ஈரோடு, சென்னை அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில். கொங்கு மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கூடிவருவதால் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் கொரோனா தொற்று நுழைந்துள்ளது.. அதன் துவக்க புள்ளி ஈரோடு என்றும் சொல்லப்பட்டது.. பிறகு அடுத்த சில தினங்களில் ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் அறிவித்தபோது உச்சக்கட்ட அதிர்ச்சி அனைவருக்குமே ஏற்பட்டது. இந்த சமயத்தில் கொரோனா ஹாட் ஸ்பாட் என்று ஈரோட்டையும் சென்னையும் அறிவித்தனர். ஒரு இடத்தில் அதிக நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு.. அதன் மூலம் மற்றவர்களுக்கு பரவி ஆபத்தான சூழல் உருவானால்தான் அதன்பெயர்தான் ஹாட்ஸ்பாட்.
அப்படித்தான் ஈரோட்டில் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பது தெரிந்தது. கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்பட்டது.. தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது.. 75 வயது நபர் ஒருவர் கடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து ஈரோடு வந்துளார்.. இவருக்குதான் தொற்று முதலில் ஏற்பட்டுள்ளது.. இவரை அடுத்து தாய்லாந்து பயணி ஒருவர் ஈரோட்டுக்கு வந்தார்.. இவர்கள் 2 பேரால் மற்றவர்களுக்கு பரவியதாகவும் கூறப்பட்டது.
மாவட்டமே மொத்தமாக மூடப்பட்டது.. யாரும் உள்ளே போக, நுழைய அனுமதி இல்லை.. 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.. தாய்லாந்து நாட்டினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், டெல்லி போய் திரும்பியவர்கள் என மொத்தம் 23 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 58 பேர் கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோடர் அறிகுறிகளுடன் பெருந்துறை போக்குவரத்து மருத்துவ கல்லூரி மருததுவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையை பொறுத்தவரை 61 பேர் டிராக் செய்யப்பட்டு, அவர்களில் அறிகுறிகள் இருந்த 44 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கிறது… அந்த டெஸ்ட் ரிசல்ட்கள் இன்னும் வெளியாகவில்லை… டிராக் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் டெஸ்ட்கள் செய்யப்படுகிறது. இன்று வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்படி மொத்தம் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 மாத கைக்குழந்தையும் ஒன்று என்பதுதான் வேதனை.