1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்!
பெய்ஜிங்: சீனாவில் தற்போது கொரோனா காரணமாக வெறும் 1,863 பேர்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதம் உள்ள எல்லோரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர்.
கொரோனா வைரஸ்.. உலகமே அமைதியாக இருந்த ஒரு நாளில் டிசம்பர் 1ம் தேதி முதல் நபர் கொரோனா வைரஸோடு சீனாவில் வுஹனில் அனுமதி ஆனார். அதன்பின் சீனாவின் வுஹன் நகரத்தில் மட்டும் வரிசையாக 37 பேர் கொரோனா வைரஸ் தாக்கி அனுமதி ஆனார்கள்.
வுஹன் நகரத்தில் இருக்கும் மார்க்கெட் ஒன்றில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்போது தொடங்கிய இந்த வைரஸ் காரணமாக தற்போது உலகம் முழுக்க மொத்தம் 938,370 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 47,286 பேர் பலியாகி உள்ளனர். 195,387 பேர் இதில் இருந்து இதுவரை விடுபட்டு உள்ளனர். அதிகமாக அமெரிக்காவில் 215,344 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5112 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 110,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 13155 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 104,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9387 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க பல நாடுகளில் இதே தீவிரத்துடன் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
ஆனால் உலகில் முதல் முதலில் கொரோனா தோன்றிய சீனாவில் தற்போது நிலை இவ்வளவு மோசமாக இல்லை. சீனாவில் மொத்தமாக கொரோனா காரணமாக இதுவரை 81,589 பேர் பாதிக்கப்பட்டனர். அங்கு தற்போது 76,408 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1863 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் அங்கு 3,318 பேர் பலியாகி உள்ளனர்.