EBM News Tamil
Leading News Portal in Tamil

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம்: அரசு பேருந்துகள் இயங்கும் என அதிகாரிகள் தகவல்

மோட்டார் வாகன வரைவு சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கங்கள் இணைந்து நாடு முழு வதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நாட்டில் ஏற்படும் சாலை விபத்து களைக் குறைக்கும் நோக்கில், மோட்டார் வாகன சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பல முக்கிய அம்சங்களைக் கொண்ட வரைவு சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தில், விபத்தை ஏற்படுத்துவது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங் களுக்கான அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களில் உள்ள பொது போக்குவரத்துத் துறை தனியார்மயம் ஆக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த வரைவு சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள் ளிட்ட 7 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. லாரி உரிமையாளர்கள், தனியார் பேருந்து உரிமையாளர் கள், ஆட்டோ, கால்டாக்ஸி, தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பேருந்துகளை இயக்க நடவடிக்கை
இதுதொடர்பாக தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டுவர உள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவில் உள்ள அம்சங்கள், மாநில அரசு பொது போக்குவரத்து துறையின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் உள்ளன. பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்னு ரிமை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வரைவு சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக் கோரி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 7-ம் தேதி (இன்று) வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், வாகன ஓட்டுநர் கள் இதில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.