ஆந்திர மாநிலத்தில் உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை திறப்பு
உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது. பாரத் எனர்ஜி ஸ்டோ ரேஜ் டெக்னாலஜி (பெஸ்ட்) நிறுவனத்துக்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலையை ஆந் திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்துவைத்தார். புதுப் பிக்க முடியாத ஆற்றல் மூலங் களைப் பயன்படுத்தி பேட்டரிகள் தயாரிப்பதற்கு பதிலாக புதுப்பிக் கத்தக்க வளங்களைப் பயன் படுத்தி ஆற்றலை சேமிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்கள், நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சார்ஜிங் மையங்கள், தொலைத் தொடர்பு அமைப்புகள், வணிக நிறுவனங்கள் போன்றவை இந்த தெர்மல் பேட்டரியை பயன் படுத்த முடியும். கார்பன் வெளியேற் றத்தையும் இந்த பேட்டரி பெருமளவில் குறைக்கும்.
1,000 மெகாவாட் திறனுள்ள இந்த தொழிற்சாலை அடுத்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக் குள் 10 ஜிகாவாட் திறனுள்ள தொழிற்சாலையாக மேம்படுத்தப் பட இருக்கிறது. எலெக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் தொலைத் தொடர்பு அமைப்புகளுக்கான பேட்டரிகள் முதலில் தயாரிக்கப்பட இருக்கின்றன. பில்வா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கான தெர்மல் பேட்டரிகளை பெஸ்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த பேட்டரிகளை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் அதிக தூரம் பயணிக்கமுடியும். இந்த தொழிற்சாலையின் வணிக செயல்பாடுகள் 2019-ம் ஆண்டு மே மாதம் முதல் ஆரம்பமாக இருக்கிறது.
ரூ.660 கோடி செலவில் பசுமைச்சூழல் திட்டம் ஒன்றையும் பெஸ்ட் நிறுவனம் தொடங்க இருக்கிறது. இதன்மூலம் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் 3,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக மழையுள்ள பகுதி களிலும், சூரியன் மறைந்தபிறகும் சூரிய ஆற்றலை பயன்படுத்த இயலாத நிலையில் இந்த சிக்கலுக்கான முக்கியத் தீர்வாக தெர்மல் பேட்டரிகள் உருவாக் கப்பட இருக்கின்றன. தற்பொழுது லித்தியம் வகை பேட்டரிகள் பெரும்பாலும் புழக்கத்தில் இருக் கின்றன. இவற்றை ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியிருக்கிறது, அதே வேளையில் இவற்றின் ஆற்ற லும் மிகக் குறைவாக உள்ளது. இந்நிலையில் தெர்மல் பேட்டரி கள் இந்த சிக்கலைத் தீர்க்கக் கூடியவையாக உள்ளன.
பெஸ்ட் நிறுவனத்தின் அதிக ஆற்றல் அடர்த்தி சேமிப்பு (ஹெஈடிஎஸ்) தொழில்நுட்பம், பாட்ரிக் கிளைன் என்பவரால் கண்டறியப்பட்டு இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்டதாகும். 95 சதவீதம் திரும்ப பயன்படுத்தத்தக்க பொருட்களைக் கொண்டும், 100 சதவீதம் சுற்றுப்புற சூழலுக்கு உகந்த விதத்திலும் இந்த பேட் டரிகள் தயாரிக்கப்படும் என பெஸ்ட் நிறுவனம் தெரிவித் துள்ளது. கார்பன் வெளியேற்றம் மற்றும் உலகம் வெப்பமாதல் போன்றவற்றை குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கத் திட்டமிட் டுள்ள இந்த நிறுவனம், 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து வாக னங்களையும் எலெக்ட்ரிக் வாகனங் களாக மாற்றும் அரசின் திட்டத் துக்கு உதவுவோம் என்றும் தெரிவித்துள்ளது.