திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை:சுங்க அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது
திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் நடத்திய சோதனை யைத் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் 6 பேர் உட்பட 19 பேர் கைது செய்யப் பட்டனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக் கப்பட்டு வருகின்றன. இவற்றின் வழியாக தங்கம், வெளிநாட்டு கரன்சிகள், நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்கள் கடத்து வது அதிகரித்து வருகிறது.
கடந்த ஜூலை 31-ம் தேதி இரவு மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் 6.3 கிலோ தங்கம், ரூ.10 லட்சம் மதிப்பி லான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக விமான நிலையத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்கு தல் மற்றும் விமான பராமரிப்பு பணி களை மேற்கொள் ளக்கூடிய, பத்ரா என்ற தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
தங்கக் கடத்தலில் சுங்கத்துறை அதிகாரி கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில், சிபிஐ இன்ஸ் பெக்டர்கள் மதுசூதனன், சூர்யக் குமார், அஜின்ராஜ், பாமா உட்பட 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மாலை திருச்சி விமான நிலையத்தில் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த 60-க்கும் மேற்பட்ட பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளைப் பிடித்து தனித்தனி யாக விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொண்டு வந்த பொருட் கள், ஆவணங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது, பயணிகள் பலரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு எலெக்ட்ரானிக்ஸ், தங்கம் உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய வரி விதிப்பு செய்யாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ விசாரணை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதற்காக சிபிஐ.யின் மதுரை மண்டல எஸ்.பி மைக்கேல்ராஜ் நேற்று வந்திருந்தார்.
மேலும், ஏற்கெனவே வந்திருந்த சிபிஐ அதிகாரிகள் தவிர, மற்றொரு குழுவினர் நேற்று இணைந்து கொண்டனர். மாலை வரை விசாரணை நீடித்தது. அதன்பிறகு விமானநிலைய சுங்கத்துறை உதவி ஆணையர் எம்.வெங்கடேசலு, கண்காணிப்பாளர்கள் கழுகாசால மூர்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், ஆய் வாளர்கள் எஸ்.அனீஸ் பாத்திமா, காசாளர் பிரசாந்த் கவுதம், எம்டிஎஸ் எனப்படும் பிரிவைச் சேர்ந்த ஃபிரட்டி எட்வர்டு, பயணிகள் புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.முருகேஷ், திருச்சி யைச் சேர்ந்த டி.தமயந்தி, அவரது கணவர் தேவக்குமார், மனோகரன் முத்துக்குமார் (எ) சரவணன், அப்துல் ரமேஷ், கனகா, சாந்தி, ராமலட்சுமி, லட்சுமி, வள்ளி, புஷ்பா, இலங்கையைச் சேர்ந்த மகேஸ்வரன், சுரேஷ் (எ) சுப்பையா ஆகிய 19 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களை கைது செய்து மதுரை யில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காரில் அழைத்துச் சென் றனர்.