EBM News Tamil
Leading News Portal in Tamil

சந்திராயன்-2 விண்ணில் ஏவுவதில் தாமதம்

சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவை ஆராய்வதற்காக கடந்த 2008 அக்டோபர் 22-ம் தேதி சந்திராயன்-1 விண்கலம் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் 3,400-க்கும் அதிகமான முறை நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வந்தது. பல்வேறு கோணங்களில் நிலவை முப்பரிமாண படங்களாக எடுத்து அனுப்பியது. நிலவில் தண்ணீர் திவலைகள் தோன்றி மறைகின்றன என்பதை கண்டு பிடித்தது. 2 ஆண்டுகள் வரை சந்திராயன்-1 செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓராண்டுக்குள் 2009 ஆக. 29-ம் தேதி அதன் தொடர்பு அறுந்துபோனது.
இதைத்தொடர்ந்து நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில் சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்து வருகிறது. இந்த விண்கலம் கடந்த ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப பிரச்சினை காரண மாக இந்த திட்டம் அக்டோபர், நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட் டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்6ஏ செயற்கைக்கோளின் தொடர்பு இரண்டே நாட்களில் துண்டிக்கப்பட்டது. அதன்பின் கடந்த செப்டம்பரில் விண்ணில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1எச் செயற்கைக்கோளும் தோல்வி யில் முடிந்தது.
எனவே சந்திராயன்-2 விண் கலத்தை பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த விண்கலத்தை ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் சந்திராயன் -2 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.