2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சேலத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியது: மோட் டார் வாகனத் துறையில் தமிழகத் துக்கு வர வேண்டிய ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திரா, தெலங் கானா மாநிலங்களுக்கு சென்றுவிட் டது. அதற்கு ஊழலே காரணம்.
கடந்த ஓராண்டில் தமிழகத் தில் 50 ஆயிரம் சிறு,குறு தொழிற் சாலைகள் மூடப்பட்டன. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதற்கு ஜிஎஸ்டியே முக்கிய காரணம். தொழில், வாணிபம் செய்ய ஏற்ற மாநிலங்களில் தமிழ கம் 15-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் செய்து வருவதாக முதல்வர் பேசி வருகிறார். ஆனால், ஊழல் பட்டியலே அதிகம் உள்ளது. தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளதா? அல்லது ஊழல் அதிகளவில் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த முதல்வர் தயாரா?
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத தால், ரூ.3,558 கோடி மத்திய அரசின் நிதியை இழந்துள்ளோம். படுதோல்வி அடைந்துவிடுவோம் என்ற காரணத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு தவிர்க்கிறது.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு விவ காரத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தலைமையில் பல்துறை நிபுணர் களை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடும்வரை பாமக தொடர்ந்து போராடும். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் அன்புமணி தொடுத் துள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். மேட்டூர் அணையில் 94 டிஎம்சி நீர் இருப்பு இருக்க வேண்டும். தூர் வாராததால் 65 டிஎம்சி நீர் இருப்பு இருக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.