EBM News Tamil
Leading News Portal in Tamil

பொருளாதாரக் குற்றங்கள் செய்து அயல்நாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழும் நபர்களின் பட்டியல்

இந்தியாவில் வங்கி மோசடி உள்ளிட்ட நிதிமோசடிகளில் ஈடுபட்டு பொருளாதாரக் குற்றங்களில் சிக்கி இந்தியாவின் பிடியிலிருந்து நழுவி அயல்நாடுகளில் வசித்து வருபவர்களின் எண்ணிக்கை 28 என்கிறது வெளியுறவுத்துறை அமைச்சகம்.
இந்த 28 பேர்களில் 6 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் போராடி வருகின்றனர்.
வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் பொருளாதாரக் குற்றவாளிகளின் பெயர்கள் கொண்ட பட்டியலை அறிவித்தார்.
இது தொடர்பான சுமார் 23 வழக்குகளை சிபிஐ தன் வசம் வைத்துள்ளது, அமலாக்கத்துறை 13 வழக்குகளை நடத்தி வருகிறது. விஜய் மல்லையா, சோக்ஸி, நிரவ் மோடி, ஜதின் மேத்தா ஆஷிஷ் ஜோபன்புத்ரா, சேத்தன் ஜெயந்திலால் சந்தேசரா, நிதின் ஜெயந்திலால், தீப்திபென் சேத்தன் குமார் சந்தேசரா ஆகியோர் 2 பட்டியல்களிலும் உள்ளனர்.
மார்ச் 23, 2018-ல் இதே போன்ற கேள்வி மக்களவையில் எழுப்பப்பட்டது. அப்போது விகே.சிங், 2014 முதல் 23 தலைமறைவாளிகள் இன்னமும் நாடுகடத்தப்படவில்லை. மார்ச் 2018 வரை 48 நாடுகளுடன் நாடுகடத்தல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது இதில் அமெரிக்கா, ஐக்கிய அரபு, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஹாங்காங் ஆகிய நாடுகளும் அடங்கும். இது தவிரவும் குரேஷியா, இத்தாலி, ஸ்வீடன் ஆகிய நாடுகளுடன் நாடுகடத்தல் உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ளன என்றார்.
பட்டியல்:
புஷ்பேஷ் பெய்த்
ஆஷிஷ் ஜோபன்புத்ரா
விஜய் மல்லையா
சன்னி கல்ரா
சஞ்சய் கல்ரா
சுதிர்குமார் கல்ரா
ஆர்த்தி கல்ரா
வர்ஷா கல்ரா
ஜதின் மேத்தா
உமேஷ் பரேக்
கம்லேஷ் பரேக்
நிலேஷ் பரேக்
ஏகலவ்யா கார்க்
வினய் மிட்டல்
சேத்தன் ஜெயந்திலால்
நிதின் ஜெயந்திலால்
தீப்திபென் சேத்தன்குமார் சந்தேசரா
நிரவ் மோடி
மெஹுல் சோக்ஸி
சப்யா சேத்
ராஜீவ் கோயல்
ஆல்கா கோயல்
லலித் மோடி
ரித்தேஷ் ஜெயின்
ஹிதேஷ் நரேந்திரபாய் படேல்
மயூரிபென் படேல்
பிரீதி ஆஷிஷ் ஜோபன்புத்ரா