EBM News Tamil
Leading News Portal in Tamil

மிஷன் இம்பாசிபில் – பால்அவுட்’ பாணியில் மும்பை சாலைகளில் ‘ஸ்டன்ட்’ செய்தால் கடும் தண்டனை: போலீஸார் எச்சரிக்கை

‘‘மிஷன் இம்பாசிபில் – பால்அவுட்’ படத்தில் வருவது போன்று இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவோரை சட்டப்படி தண்டிப்போம்’’ என்று மும்பை போலீஸார் எச்சரித்துள்ளனர்.
ஹாலிவுட்டில் ‘மிஷன் இம்பாசிபில் – பால்அவுட்’ படம் சமீபத்தில் வெளியானது. இதில் கதாநாயகன் டாம் குருஸ், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வேகமாக தப்பிக்கும்போது, கார் மீது மோதி விழும் காட்சியில் நடித்துள்ளார். அதை பார்த்து மும்பை சாலைகளில் இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் ‘ஸ்டன்ட்’ செய்து வருகின்றனர்.
அவர்களை மும்பை போலீஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘‘மிஷன் இம்பாசிபில் பால்அவுட் படத்தில் வருவது போன்று, மும்பை சாலைகளில் ஸ்டன்ட் செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும். அது ‘பாசிபில்’தான்’’ என்று எச்சரித்துள்ளனர். மேலும் ட்விட்டர் பக்கத்தில் டாம் குரூஸ் இருசக்கரத்தில் வேகமாக செல்லும் 12 வினாடி காட்சியையும் பதிவிட்டுள்ளனர்.
மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோம் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். பாதுகாப்புதான் முக்கியம். தாறுமாறாக வாகனங்களை ஓட்டாதீர்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.