EBM News Tamil
Leading News Portal in Tamil

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது: 30 சதவீத லாரிகள் ஓடவில்லை

பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் 30 சதவீத லாரிகள் ஓடவில்லை.
டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலை யைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீட்டுத் தொகையை தொடர்ந்து உயர்த்தி வருவதை ரத்து செய்ய வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளனர்.
காலை 6 மணி முதல், பல் வேறு இடங்களில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் காய்கறிகள், அரிசி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், பெரும்பான்மையான சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காததால், 70 சதவீத லாரிகள் வழக்கம்போல் ஓடின. நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் சரக்கு புக்கிங் மையங்கள் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் செயல்பட்டன.
போராட்டம் தீவிரமடையும்
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் கூறும்போது, ‘‘டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உட்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம். அதன்படி, நாடு முழுவதும் உள்ள 81 லட்சம் சரக்கு லாரிகளில் 30 சதவீதம் ஓடவில்லை. இதனால், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
தமிழகத்தில் சுமார் 2 லட்சம் லாரிகள் ஓடவில்லை. அடுத்தடுத்து, பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், போராட்டம் மேலும் தீவிரமடையும். இதற்கிடையே, எங்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திட, மத்திய அரசு தரப்பில் இருந்து விரைவில் அழைப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும்
அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர் கள் சம்மேளனம் அறிவித்துள்ள லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்பதாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
இதுகுறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வரும் ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவ தாக அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால் அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சம்மேளனம் நேற்று முதல் (18-ம் தேதி) வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த இரு அறிவிப்புகளால் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அனைத்து சங்க தலைவர்களும் அமர்ந்து பேசி ஒரே தேதி யில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.
லாரி உரிமையாளர் சங்க போராட்டம் வெற்றிபெற வேண் டும் என்று சொன்னால் ஒரே தேதியில் அனைத்து சங்கங்க ளும் இணைந்து வேலைநிறுத் தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
லாரி உரிமையாளர்கள் இடையே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட சிலர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதை லாரி உரிமையாளர்கள் நம்ப வேண்டாம். வழக்கம்போல் லாரிகளை இயக்கலாம்.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் ஜூலை 20-ம் தேதி முதல் அறிவித்துள்ள காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில், தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம், தமிழ் நாடு மாநில லாரி உரிமையாளர் கள் சம்மேளனம், இதன் உறுப்பு சங்கங்களும் கலந்துகொள்ளும்.
இதன்படி, தமிழகத்தில் 4.5 லட் சம் லாரிகளும் நாடு முழுவதும் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரி களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.