வெறுப்பு அரசியலை நடத்தாதீர்: பா.ஜ.மீது ராகுல் சாடல்
புதுடில்லி: பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். வெறுப்பு அரசியலை நடத்துகிறது என காங். தலைவர் ராகுல்கூறினார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கோன் மாவட்டத்தில் ஒருபிரிவினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்த தலித் சிறுவர்களை பிறவகுப்பினர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு தாக்கினர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காங். தலைவர் ராகுல் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியது, மஹாராஷ்டிராவில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. அவர்கள் செய்த தவறு, மற்றொரு சமூகத்தினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்ததுதான். இது போன்ற கொடூர செயல் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வின் நச்சுத்தன்மை நிறைந்த வெறுப்பு அரசியலை நடத்துகிறது. இதனை நாம் எதிர்க்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது என்றார்.