EBM News Tamil
Leading News Portal in Tamil

அரவிந்த் கேஜிரிவாலுக்கு ஆதராவாக களமிறங்கிய கமல்ஹாசன்!

டெல்லியில் IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவாலுக்கு ஆதரவாக கமல் ஹாசன் குரல் கெடுத்துள்ளார்!
இதுகுறித்து அவர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டடுள்ளதாவது… “மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசில் தலையிடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது ஆகும் என மத்திய அரசினை கண்ட்டித்து பதிவிட்டுள்ளார். மேல்லும் தற்போது டெல்லியில் நடப்பது தான் தமிழகம் மற்றும் புதுவையிலும் நடைப்பெற்று வருகிறது. இத்தகு செயல்பாடுகள் மாற்றத்தை விரும்பும் பொதுமக்களுக்கு எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன், டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி MLA-க்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் IAS அதிகாரிகள் எவ்வித ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை எனவும், IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எவ்வித முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் எனவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்து, IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவால் கடந்த 3 நாட்களாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் ஈடுப்பட்டு வருகின்றார். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனவும் அரவிந்த் கேஜிரிவால் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இவரது போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ஆரதவு தெரவித்து ட்வீட் செய்துள்ளார்!