துணை நிலை கவர்னர் வீட்டில் தூங்கி கெஜ்ரிவால் காத்திருப்பு
புதுடில்லி: டில்லி அரசின் டோர்டெலிவரி திட்டத்தை செயல்படுத்தாக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி துணை நிலை கவர்னர் வீடு முன் தர்ணா செய்தார் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் கெஜ்ரிவால்.
டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பல்வேறு மக்கள் நல திட்டங்களான ரேசன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குதல் உள்ளிட்டபல்வேறு சேவை திட்டங்களை கொண்டுவந்தார்.
இதனை அமல்படுத்திட சம்பந்தப்பட்ட துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் கெஜ்ரிவால் உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புறக்கணித்தனர். இது தெடார்பாக நேற்று இரவு துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அவரது இல்லம் சென்றார். சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் வீடு வரவேற்பாளர் அறையில் பல மணி நேரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கினார்.அவருடன் மணீஸ் சிசோடியா, உள்ளிட்டோரும் துணை நிலை கவர்னர் வரவேற்பாளர் அறையில் காத்திருந்தனர்.
இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,அரசின் திட்டங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்ற மறுக்கின்றனர். நேற்று நடந்த சட்டசபையில் டில்லிக்கு மாநில அரசு அந்தஸ்து அளிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மத்தியில் நல்லாட்சி நடப்பது உண்மையனால் பிரதமர் மோடி டில்லி யூனியன் பிரதேசத்தை மாநில அந்தஸ்துக்கு உயத்திட வேண்டும் என்றார். மத்திய அரசின் கைப்பாவையாக துணை நிலை கவர்னர் செயல்படுவது சரியல்ல.