பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
மஹாராஷ்டிராவில், கோரேகான் பீமா மாவட்டத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அவர்களில் ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதம் வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய, மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டி இருப்பது அம்பலம் ஆனது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமரின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், உள்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு முகமை அதிகாரிகள் பங்கேற்றனர். பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.