EBM News Tamil
Leading News Portal in Tamil

பிரணாப் மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் : மகள் திட்டவட்டம்

புதுடில்லி : முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது மகள் சார்மிஷ்டா முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் கலந்துக் கொண்டு பேசியது தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை ஆர்.எஸ்.எஸ். பரிந்துரைக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் ராவத் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரணாப்பின் மகள் சார்மிஷ்டா, நாட்டின் ஜனாதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பிறகு எனது தந்தை மீண்டும் தீவிர அரசியலுக்கு வர மாட்டார் என தெரிவித்துள்ளார்.