EBM News Tamil
Leading News Portal in Tamil

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக்கால் வரையப்பட்ட ஆமை!

உலக சுற்றுச்சூழல் தினத்தைப் பயன்படுத்தி பிளாஸ்டிக்கை தடை விதமாக பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு ஆமை ஒன்றை மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வரைந்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று (ஜூன் 5ம் தேதி) உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பெருகி வரும் மக்கள் தொகையாலும், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை காக்க இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்த உலகில் வாழும் மனிதர்களைத் தவிர சுற்றுச்சூழலுக்கு யாரும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.


இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரிசா மாநிலம், பூரி கடற்கரையில், பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி உலகிலேயே மிகப்பெரிய ஆமை ஒன்றை உருவாக்கியுள்ளார். மேலும், 50 அடி நீளமும், 30 அடி அகலும் கொண்ட அந்த ஆமைகள் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதற்கு கீழாக BeatPlasticPollution என்பதனையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாடுபாடுகளை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.