EBM News Tamil
Leading News Portal in Tamil

தயார் படுத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் மோடி -ராகுல்!

தயார் படுத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் மோடியால், நேரடி கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலையில் பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் பேசினார். இச்சந்திப்பின் போது மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி அவர்கள் பதில் அளித்தார்.
அப்போது கூடியிருந்த மாணவர்களில் ஒருவர் உலகளவில் ஆசியா சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்று ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி அளித்த பதிலைக் காட்டிலும் அவரின் மொழிபெயர்ப்பாளர் அளித்த பதிலில் ஏராளமான புள்ளிவிவரங்கள், தகவல்கள் அடங்கி இருந்தது. இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி பதில்கள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிட்டு கேள்வியைக் கேட்கக் கோரி, அதற்கான பதிலும் தயாராக வைத்திருந்தது போலும் இருந்தது என காங்கிரஸ் கட்சி தரப்பில் விமர்சணம் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்…


“உடனுக்குடன் கேட்கப்படும் கேள்வியை எதிர்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான், அவரின் மொழிபெயர்ப்பாளரும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பதிலை உடனுக்குடன் வெளியிடுகின்றார். இந்த நிகழ்வின் மூலம் நமது பிரதமர் மோடி நிகழ்கால கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கமாட்டார் என தெரிகிறது” என பதிவிட்டுள்ளார்.