கறுப்பு பணம்,பினாமி குறித்து தகவல் அளித்தால் பரிசு
புதுடில்லி: வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கை: திருத்தப்பட்ட வருமான வரி சட்டத்தின்படி, ஒருவரின் வரி ஏய்ப்பு அல்லது வெளிநாட்டில் சொத்து மறைத்து வைக்கப்பட்டது குறித்து, வருமான வரித்துறையின் விசாரணை அதிகாரிகளிடம் முறையாக தகவல் அளித்தால், அவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும்.
வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டது குறித்து தகவல் வருவோருக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படும்.
பினாமி சொத்து பரிவர்த்தனை குறித்த சட்டத்தின் கீழ், பினாமி சொத்து மற்றும் பரிமாற்றம் தொடர்பாக தகவல் அளித்தால், அவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படும். தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அறிவித்துள்ளது.