ராணுவ எல்லையில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே மோதல்!
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் தாங்தார் எல்லைப்பகுதியில், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பயங்கரவாதிகள் பலியாகினர்!
ஜம்மு காஷ்மீரின் தாங்தார் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டடது.
இந்த தீவிர தேடுதல் வேட்டையின் போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ஐந்து பேரை பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை!
#SpotVisuals from Tangdhar: 5 terrorists, who were trying to infiltrate, have been killed by security forces in an ongoing operation. (Visuals deferred by unspecified time) #JammuAndKashmir pic.twitter.com/MCNLYMLhLb
— ANI (@ANI) May 26, 2018